அசாம்: இளைஞரை துரத்தி தாக்கிய காட்டு யானை; வெளியான காட்சி

அசாம்: இளைஞரை துரத்தி தாக்கிய காட்டு யானை; வெளியான காட்சி
அசாம்: இளைஞரை துரத்தி தாக்கிய காட்டு யானை; வெளியான காட்சி

அசாம் மாநிலத்தில் இளைஞர் ஒருவரை காட்டு யானை துரத்தி தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலம் துப்ரி பகுதியில் உள்ள வனங்களில் யானைகள் அதிகம் வசிக்கின்றன. இந்நிலையில் தாமர்ஹட் என்ற கிராமப்பகுதியில் சென்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பார்த்த காட்டு யானை உடனே விரட்டத் தொடங்கியது. அதனிடமிருந்து உயிரை காத்துக்கொள்ள தப்பிக்க தலைதெறிக்க ஓடிய அந்த நபர் ஒரு கட்டத்தில் தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவரை யானை தனது தும்பிக்கையால் ஆவேசமாக தூக்கி கீழே எறிந்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் இருந்த நபர்கள் ஓடிவந்து யானையை காட்டுக்குள் விரட்டினர். பலத்த காயமடைந்த அந்த நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com