“ஏமாற்றத்தை அளிக்கிறது”- WTC-ல் இந்தியா தோல்வியடைந்தது குறித்து அஸ்வின் ட்வீட்! #Video

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்றதற்கு ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள். போட்டியில் தோற்றது (இந்தியா) ஏமாற்றத்தை அளிக்கிறது. இருப்பினும் இந்த இடத்துக்கு வருவதென்பது, கடந்த 2 ஆண்டுகளில் செய்த மிகப்பெரிய முயற்சியின் பலன்தான்.

அனைத்து குழப்பங்கள் மற்றும் மதிப்பீடுகளுக்கு மத்தியிலும் உறுதுணையாக நின்ற சக வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது இந்நேரத்தில் மிகவும் முக்கியம்” என கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 61 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வினை, ஆடுகளத்தின் தன்மையை காரணம்காட்டி அணி நிர்வாகம் இறுதிபோட்டியில் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ashwin
ரோகித் சர்மா செய்தது பெரும் தவறு.. அஸ்வினை ஏன் சேர்க்கவில்லை..? - எழும் கேள்விகள்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com