\
லக்னோ: கார் ஓட்டுநரை தாக்கும் இளம்பெண்ணை கைது செய்ய எழும் கோரிக்கை

லக்னோ: கார் ஓட்டுநரை தாக்கும் இளம்பெண்ணை கைது செய்ய எழும் கோரிக்கை

லக்னோ: கார் ஓட்டுநரை தாக்கும் இளம்பெண்ணை கைது செய்ய எழும் கோரிக்கை
Published on: 

லக்னோவில் கார் ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் , அப்பெண்ணை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

இளம்பெண் ஒருவர் சிக்னலில் சாலையை கடந்து செல்லும்போது அவர் அருகே வரும் கார் ஒன்று சிக்னலில் நிற்கிறது. இந்நிலையில் கார் ஓட்டுநரை அப்பெண் தாக்குகிறார். கார் ஓட்டுநரை பெண் தாக்கும் காட்சி ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.

கார் தன் மீது மோதி விட்டதாக கூறி ஓட்டுநரை, அப்பெண் தாக்கியதாக ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் அப்படி நடக்கவில்லை என மற்றொரு தரப்பினர் சமூகவலைதளங்களில் வாதிடுகின்றனர். கார் ஓட்டுநர் மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற்று , அப்பெண்ணை கைது செய்ய வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை வைக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com