மருத்துவப் படிப்புக்கான தரவரிசை: 7.5% ஒதுக்கீட்டில் அறந்தாங்கி மாணவன் முதலிடம்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை: 7.5% ஒதுக்கீட்டில் அறந்தாங்கி மாணவன் முதலிடம்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை: 7.5% ஒதுக்கீட்டில் அறந்தாங்கி மாணவன் முதலிடம்
Published on

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அறந்தாங்கியைச் சேர்ந்த மாணவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் சிவா, பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்விலும் பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாக, நீட் தேர்வுக்காக நன்கு படித்ததாக சிவா தெரிவித்துள்ளார். முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 514 மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும், ஆசிரியர்கள் தனது வீட்டிற்கே வந்து ஊக்கமளித்து படிக்கச் சொன்னதால், நல்ல மதிப்பெண்களை பெற்றதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளியில் மற்ற பிள்ளைகளை படிக்க வைக்கும் பொழுது தன்னுடைய மகனை படிக்க வைக்க வசதியில்லை என்று ஒரு காலத்தில் வேதனைப்பட்டதாகவும், தற்போது அரசு பள்ளியை நினைத்து பெருமை கொள்வதாகவும், சிவாவின் தயார் புனிதா தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com