\
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை அறிவித்தார்கள், ஆனால் நிதி கூட ஒதுக்கவில்லை : பொன்முடி

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை அறிவித்தார்கள், ஆனால் நிதி கூட ஒதுக்கவில்லை : பொன்முடி

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை அறிவித்தார்கள், ஆனால் நிதி கூட ஒதுக்கவில்லை : பொன்முடி
Published on

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதாக அறிவித்துவிட்டு கடந்த ஆட்சியில், நிதி கூட ஒதுக்கவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகம் இயங்கும் என அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதனைக் கண்டித்து, பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெ.ஜெயலலிதா என்ற பெயர் தான் பிரச்னை என்றால், அந்த பெயரைக்கூட மாற்றிவிட்டு, வேறு எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து, பல்கலைக் கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என சி.வி.சண்முகம் ஆர்ப்பாட்டத்தின் போது பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com