\
“தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலை தான்!” - அமித் ஷா

“தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலை தான்!” - அமித் ஷா

“தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலை தான்!” - அமித் ஷா
Published on

“தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி அண்ணாமலை தான்!” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

கரூர் - அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேலாயுதம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து திறந்த வாகனத்தில் பரப்புரையை தொடங்கிய அமித்ஷா, பொதுமக்களிடம் வாக்கு கேட்டபடியே கடைவீதி வரை சென்றார். 

பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். வாக்குசேகரிப்பின் போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பூக்களை தூவி வரவேற்றனர். 

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பேசிய அமித்ஷா, “ஒட்டுமொத்த தமிழகத்திலும் நேர்மையான அதிகாரி என்றால் அது அண்ணாமலை தான். தமிழகத்துக்கான வளர்ச்சியை பாஜக, அதிமுக கூட்டணியை தவிர வேறு யாராலும் தர முடியாது” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com