
புதுச்சேரி முருங்கம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான முருகன், இன்ஸ்டாகிராமில் போலி நிறுவனம் செய்த விளம்பரத்தை நம்பி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் அவர் செய்த முதலீட்டுத் தொகைக்கு நிகரான தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளதி. பின் அவரிடமிருந்த பெரிய முதலீடுகளை பெற்றுள்ளது.
அப்படி சுமார் 62 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்த நிலையில், தனது வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்த சுமார் 1 கோடியே 15 லட்சம் ரூபாயை திருப்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை எடுக்க முடியாதென வங்கித் தரப்பில் இருந்து பதில்வந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். உடனடியாக முருகன் சைபர் க்ரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.