இமாச்சலப் பிரதேசம்: தரை மட்டமான 8 மாடி கட்டடம் - வீடியோ

இமாச்சலப் பிரதேசம்: தரை மட்டமான 8 மாடி கட்டடம் - வீடியோ

இமாச்சலப் பிரதேசம்: தரை மட்டமான 8 மாடி கட்டடம் - வீடியோ
Published on
இமாச்சலப் பிரதேசத்தில் மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த 8 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிம்லாவின் காச்சிகாட்டி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக, இப்பகுதியில் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இதனால் பெரிதளவில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே இருந்த இரு குடியிருப்பு கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com