குடும்பத்தோடு லண்டனுக்கு குடிபெயர்கிறாரா முகேஷ் அம்பானி?

குடும்பத்தோடு லண்டனுக்கு குடிபெயர்கிறாரா முகேஷ் அம்பானி?
குடும்பத்தோடு லண்டனுக்கு குடிபெயர்கிறாரா முகேஷ் அம்பானி?

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தோடு லண்டனுக்கு குடிபெயர்கிறார் என்ற தகவலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

அம்பானி குடும்பத்தினர் லண்டனில் வீடு வாங்கியுள்ளதாகவும் வரும் ஏப்ரல் மாதம் அவ்வீட்டில் குடியேற அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. லண்டன் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பகுதியில் கட்டப்பட்ட சொகுசுவீட்டை 592 கோடி ரூபாய்க்கு அம்பானி வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தொடர்ந்து மும்பையிலேயே தங்கியிருக்க போவதாகவும், லண்டனுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாடுகளுக்கோ குடிபெயரும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் விளக்களித்துள்ளது. லண்டனில் வாங்கப்பட்டுள்ள நிலமும் வீடும் கோல்ஃப் மைதானம் கட்டுவதற்காக வாங்கப்பட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com