\
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை பயன்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம்: அன்வர் ராஜா

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை பயன்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம்: அன்வர் ராஜா

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்களை பயன்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம்: அன்வர் ராஜா
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை தலைவர்கள் அதிகளவில் பயன்படுத்தாததே காரணம் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மஹாலில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பேசிய முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, "ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகளை தவிர்த்து கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா ? புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்களா ? என்பதைத்தான்.

நீங்கள் அதை சொல்லாமல் மறந்துவிட்டால் அவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். இந்த தேர்தல் மற்றும் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. ஆனாலும் இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோற்று இருக்கிறோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com