"கைவிடு கைவிடு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடு" - திருவையாற்றில் விவசாயிகள் போராட்டம்

"கைவிடு கைவிடு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடு" - திருவையாற்றில் விவசாயிகள் போராட்டம்

"கைவிடு கைவிடு புறவழிச்சாலை திட்டத்தை கைவிடு" - திருவையாற்றில் விவசாயிகள் போராட்டம்
Published on

தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 30ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற்பயிர்களின் மீது மண்ணை கொட்டுவதைக் கண்டித்து, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைனையடுத்து அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டியூரில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com