\
கிருஷ்ணகிரி: குளியலறையில் 3 குழந்தைகளுடன் வசிக்கும் கொரோனாவால் கணவரை இழந்த பெண்

கிருஷ்ணகிரி: குளியலறையில் 3 குழந்தைகளுடன் வசிக்கும் கொரோனாவால் கணவரை இழந்த பெண்

கிருஷ்ணகிரி: குளியலறையில் 3 குழந்தைகளுடன் வசிக்கும் கொரோனாவால் கணவரை இழந்த பெண்
Published on

கொரோனா கணவரைப் பறித்து விட்டது. கனமழை வீட்டை நிர்மூலமாக்கி விட்டது. வசிக்க இடமின்றி 3 குழந்தைகளுடன் குளியலறையில் தங்கித் தவித்துவருகிறார் ஒரு தாய்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டியில் வாழ்ந்து வந்த ராதா என்ற பெண்ணின் கணவர் 3 மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 3 குழந்தைகளுடன் நிற்கதியான ராதாவின் வீடும் அண்மையில் கனமழையால் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் குளியறையில் தங்கியிருக்கின்றனர்.

இரவு நேரங்களில் உடமைகளை வெளியில் வைத்துவிட்டு, நால்வரும் இந்த சிறு அறையிலேயே உண்டு, உறங்கி வருகின்றனர். தமது நிலையை அறிந்தும் ஊராட்சி மன்றத் தலைவரோ, அரசு அதிகாரிகளோ உதவ முன்வரவில்லை என வேதனையுடன் கூறுகிறார் ராதா. தொடர்ந்து பெய்யும் கனமழை கூலி வேலைக்குச் செல்வதற்கும் தடையாக உள்ளதாகக் கூறும் இவர், உதவிக்கரம் நோக்கி காத்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com