வீடியோ ஸ்டோரி
தஞ்சை: வயலில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி உயிரிழப்பு
தஞ்சை: வயலில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி உயிரிழப்பு
தஞ்சை மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் விவசாயி உயிரிழந்தார்.
ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன் என்பவர், வயலில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். தொடர் மழை காரணமாக, அவரது வயலில் தாழ்வாக மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல், மின் வயரை மிதித்ததில், ஜெயராமன் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற ஒரத்தநாடு காவல் துறையினர், ஜெயராமனின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.