
நெல்லை மாவட்டம் பணகுடியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை கயிறு கட்டி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆலந்துறை ஆற்றில் காலையில் குறைவான தண்ணீர் சென்றதால் விவசாயப் பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். ஆனால் அதன்பின்னர் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் ஆற்றை கடக்கமுடியாமல் தொழிலாளர்கள் தவித்த நிலையில், தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி, மிதவை உபகரணங்கள் உதவியுடன் தொழிலாளர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டு கரைசேர்த்தனர்.