சென்னை: வெறிநாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு - அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்?

சென்னை: வெறிநாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு - அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்?
சென்னை: வெறிநாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு - அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்?

சென்னை பூந்தமல்லியில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

பூந்தமல்லியில் உள்ள அகரமேல் பகுதியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிறுவன் மோனிஷ் உள்பட 5க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவர்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், ஆனால் சிறுவன் மோனிஷ் நாட்டு மருந்து மட்டும் எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவனுக்கு நாய் போன்று வாயில் இருந்து எச்சில் ஊறியது, தண்ணீரை கண்டால் தப்பித்து ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனை பெற்றோர் எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் ரேபிஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பின்னர் கடந்த ஒரு மாதக்காலமாக உரிய சிகிச்சை அளித்துவந்தப்போதும் பலன் அளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார். இதனிடையே, சிறுவனுடன் பழகியவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com