கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு
கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதி உதவி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசுக் கடை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதி உதவி அறிவித்துள்ளார்.

சங்கராபுரம் அண்ணாநகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் செல்வகணபதி, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி உரிமம் பெற்று பட்டாசு விற்பனையிலும் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்நிலையில் செல்வகணபதி 4 லாரிகளில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொண்டுவந்து கடையின் முதல் தளத்தில் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கிடங்கில் இருந்து பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. சில நொடிகளில் பங்கயர சத்தத்துடன் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறன. அருகில் உள்ள பேக்கரியில் இருந்த எரிவாயு சிலிண்டர்களும் வெடித்தன. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் கட்டடங்கள் சிதறி விழுந்தன.

தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்ட தீயணைப்பு துறையினர், இரவு 7 மணி அளவில் மீட்பு பணிகளை தொடங்கினர். அதிகாலை வரை மீட்பு பணி நீடித்தது. விபத்தில் மூன்று பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிகிச்சை பெறுபவர்களில் இருவர் 80 சதவிகித தீக்காயங்களோடு கவலைக்கிடமான உள்ளனர். கடையின் உரிமையாளர் செல்வகணபதி உட்பட 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து குறித்து அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com