\
சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து அமல் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து அமல் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து அமல் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
Published on

சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் பயணித்து வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், கலைஞர் சாலை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த உத்தரவு இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து கார், லாரி உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் ஓட்டுநர்கள் கட்டணம் செலுத்தாமல், இந்த 4 சுங்கச்சாவடிகளைக் கடந்து சென்றனர்.

வாடகை கார், வாடகை ஆட்டோ ஓட்டுவோர் ஒரு நாளில் குறைந்தபட்சம் 60 ரூபாய் கட்டணம் செலுத்தும் சூழல் இருந்த நிலையில், அந்தத் தொகை மிச்சமாவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் நாவலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக்கூடாதென அறிவிக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com