21 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 3டி ப்ரிண்டட் வீடு!

21 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 3டி ப்ரிண்டட் வீடு!
21 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 3டி ப்ரிண்டட் வீடு!

இந்தியாவில் முதல்முறையாக, மென்பொருள் 3டி ப்ரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள், 21 நாட்களில் அந்த வீட்டை கட்டி முடித்துள்ளனர்.

ஒரு பிரதான அறை. ஒரு படுக்கை அறை. சமையலறை, கழிப்பறை உட்பட அழகிய வெளி தோற்றத்தோடு காணப்படும் இந்த வீடு, மென்பொருள் மூலம் 3டி பிரிண்டர் இயந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. மொத்தமாக 21 நாட்களில் உருவான இந்த வீட்டில், அடித்தளம் தவிர்த்து மற்ற அனைத்து பாகங்களும் ஒரே வாரத்தில் 3டி தொழில்நுட்பத்தில் கான்கிரீட் பசை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களது வடிவமைப்பில், ஐஐடி வளாகத்திலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த வீட்டை, கடந்த ஏப்ரல் மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஐஐடி முன்னாள் மாணவர்களின் 5 ஆண்டுகால உழைப்பில் உருவான மென்பொருள், 2 நிமிடங்களில் இருகிவிடக்கூடிய வேதியியல் மூலப்பொருட்கள் நிறைந்த கான்கிரீட் பசை, 3டி பிரின்டர் இயந்திரம் மூலம் ஒரே நாளில் ஒரு அறையை கட்டிமுடிக்க முடிகிற தொழில்நுட்பம், என, எல்லாம் சேர்ந்து உறுதித்தன்மை மிக்கதாக இந்த வீட்டை உருவாக்கியுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சாமானியர்களுக்கும் கட்டுபடியாகும் வகையில், இந்த தொழில்நுட்பம் மலிந்துவிடும் என்கின்றனர்.

கடந்த மாதம் இந்த வீட்டை நேரில் வந்து பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்த தொழில்நுட்பம் பேரிடர் காலத்தில் பேருதவியாக இருக்கப் போகிறது என தெரிவித்துள்ளார். அதுவும் சாத்தியாகும்பட்சத்தில், இந்த 3டி ப்ரின்டட் வீடு, கட்டுமானத் துறையில் இந்தியாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com