\
பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து - 120 பேரில் 40 பேர் மீட்பு

பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து - 120 பேரில் 40 பேர் மீட்பு

பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து - 120 பேரில் 40 பேர் மீட்பு
Published on

அசாம் மாநிலம் ஜோர்கட் மாவட்டத்தில், படகுகள் மோதிக்கொண்ட விபத்தில் 120 பேர் நீரில் மூழ்கினர். இவர்களில் 40க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜோர்கட் மாவட்டம் நிமதி கட் என்ற இடத்தில், பிரம்மபுத்ரா நதியில் இந்த விபத்து நேரிட்டது. இரண்டு படகுகள் மோதிக் கொண்ட விபத்தில், ஒரு படகு நீரில் மூழ்கியது. அதில் 120க்கும் அதிக பயணிகள் இருந்ததாக நீர்வழி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 40க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை. நீரில் மூழ்கிய படகில் இருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் நதியில் மூழ்கின. படகு விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com