\
திருப்பத்தூர்: உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 18 சவரன் நகை பறிமுதல்-பறக்கும்படையினர் அதிரடி

திருப்பத்தூர்: உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 18 சவரன் நகை பறிமுதல்-பறக்கும்படையினர் அதிரடி

திருப்பத்தூர்: உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற 18 சவரன் நகை பறிமுதல்-பறக்கும்படையினர் அதிரடி
Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் இன்று குடியாத்தம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சுமார் 6.5 லட்சம் மதிப்பிலான 18 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

ஆப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் இருந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கணேஷின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் ஆம்பூர் புறவழிச் சாலையில் சத்தியமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற 1.29 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com