\
10,11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'ஆல் பாஸ்' என அச்சிடப்படும்: பள்ளிக் கல்வித் துறை

10,11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'ஆல் பாஸ்' என அச்சிடப்படும்: பள்ளிக் கல்வித் துறை

10,11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'ஆல் பாஸ்' என அச்சிடப்படும்: பள்ளிக் கல்வித் துறை
Published on: 

10, 11 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ALL PASS என்று அச்சிட்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் 10, 11ஆம் வகுப்பில் படித்த மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதையடுத்து பொதுத்தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதை குறிப்பிடும் வகையில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க தேர்வுத்துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வரலாற்றிலேயே இதுபோல் சான்றிதழ் வழங்குவது இதுவே முதன்முறையாகும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com