\
"7 ஆண்டுகளாக பிரதமரின் சுதந்திர தின உரை மாறவில்லை" - காங்கிரஸ் விமர்சனம்

"7 ஆண்டுகளாக பிரதமரின் சுதந்திர தின உரை மாறவில்லை" - காங்கிரஸ் விமர்சனம்

"7 ஆண்டுகளாக பிரதமரின் சுதந்திர தின உரை மாறவில்லை" - காங்கிரஸ் விமர்சனம்
Published on: 

ஏழு ஆண்டுகளாக பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை ஒரே மாதிரியாகவே இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பிரதமரின் சுதந்திர தின பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதிய திட்டங்களை அறிவிக்கும் பிரதமர், அவைகளை செயல்படுத்துவதில்லை என்றார். செங்கோட்டையிலிருந்து காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சிப்பதால் மட்டும் நாடு முன்னேறாது என்ற கார்கே, காங்கிரஸ் ஆட்சியில்தான், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றார்.

இதேபோல 2019 ஆம் ஆண்டின் பிரதமரின் சுதந்திர தின உரையை பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, குறைந்தபட்சம் 100 லட்சம் கோடி திட்டங்கள் என்பதையாவது மாற்றியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com