“பழைய சாலையை மில்லிங் செய்யாமல் புதிய சாலை போடக்கூடாது” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

“பழைய சாலையை மில்லிங் செய்யாமல் புதிய சாலை போடக்கூடாது” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
“பழைய சாலையை மில்லிங் செய்யாமல் புதிய சாலை போடக்கூடாது” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

’மில்லிங்’ செய்யாமல் சாலை போடக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில், ரூ.1.5 கோடி செலவில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி அரசு சார்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பணி தரமாக நடக்கிறதா என நவீன கருவிகள் முலம் மாநகராட்சி தலைமை பொறியாளர் ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த பெரும் மழையின்போது பாதிக்கப்பட்ட சாலைகளை, சிறப்பு சாலைகள் திட்டத்தின் முலம் தரமான சாலைகள் அமைக்கவும் பேருந்து மற்றும் உட்புற சாலைகள் 1650 சாலைகளை ரூ. 213 கோடி செலவில் புதிதாக அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அசோக் நகர் 11வது அவென்யூவில் ரூ. 1.50 கோடி மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாலை, பழுதாகி இருந்த நிலையில் அந்த பழைய சாலை மில்லிங் செய்து அகற்றப்பட்டு புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலைகள் கனம், தரமாக உள்ளதா என்பதை சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் என்.மகேஷன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நவீன கருவிகள் முலம் சாலையின் தரம், கனம், தட்பவெப்ப நிலைகள் குறித்து ஆய்வு செய்தனர். மழைக்காலங்களில் சாலைகளில் உள்ள மழைநீர் கால்வாய்களுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

இந்நிலையில், “பழைய சாலையை தோண்டாமல் புதிய சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் போடப்பட்டு வரும் சாலைகளை நேற்று இரவு நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்திருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com