\
’மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான்’ - ஓ.பி.எஸ் பேச்சு

’மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான்’ - ஓ.பி.எஸ் பேச்சு

’மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான்’ - ஓ.பி.எஸ் பேச்சு
Published on

பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் ’மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்கு காரணம் பிரதமர் மோடிதான்’ என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார். மேடையில் அவர் பேசும்போது,

“பிரதமர் மோடி இந்தியாவை பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களால் வல்லரசு நாடுகளுக்கு இணையாக மாற்றியுள்ளர். தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் அளித்து வருகிறார். தமிழகம் மருத்துவக் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லுரிகளுக்கான அனுமதியை வழங்கியவர் பிரதமர் மோடி. 1500 கோடி மதிப்பீட்டில் மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவர காரணமும் பிரமர் மோடிதான். இதனால், தமிழக மக்கள் திமுகவுக்கு தகுந்த பாடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com