"நேரு படம் புறக்கணிப்பு" - வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

"நேரு படம் புறக்கணிப்பு" - வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
"நேரு படம் புறக்கணிப்பு" - வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மத்திய அரசு வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சுதந்திர தின போஸ்டரில் நாட்டின் முதல் பிரதமர் நேரு படத்தை சேர்க்காததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை அமிர்த மகோத்சவம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக ஐசிஎச்ஆர் எனப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தேசப்பிதா மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங், மதன் மோகன் மாளவியா மற்றும் வீர் சாவர்க்கர் ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த படங்களில் முதல் பிரதமர் நேருவின் படத்தை சேர்க்காதது தவறான செயல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் இன்றி விமானத்துறை வரலாறு தொடர்பான கொண்டாட்டங்களையும் காரை கண்டு பிடித்த ஹென்றி ஃபோர்டு இன்றி காரின் வரலாற்று கொண்டாட்டங்களையும் நடத்தினால் எவ்வளவு அபத்தமோ அதைப் போன்றதுதான் முதல் பிரதமர் நேருவின் நினைவுகள் இன்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவதும் என ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com