வீடியோ ஸ்டோரி
"மேகதாது அணை கட்டத் தேவையான அனுமதி பெறுவேன்" - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதி
"மேகதாது அணை கட்டத் தேவையான அனுமதி பெறுவேன்" - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உறுதி
விரைவில் மீண்டும் டெல்லி சென்று மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான அனுமதியை பெறுவேன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மைசூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஏற்கனவே மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்துள்ளதாகவும், விரைவில் வழக்கறிஞர்கள் குழுவுடன் டெல்லி சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.