என்.டி.ஆர் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்திக் காட்டிய ஜெகன் மோகன் ரெட்டி

என்.டி.ஆர் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்திக் காட்டிய ஜெகன் மோகன் ரெட்டி
என்.டி.ஆர் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்திக் காட்டிய ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ளார்.  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் என்னனென்ன?

ஆந்திராவில் என்.டி.ஆர்  குடும்பம் மூப்பது ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததது. அந்தக் குடும்பத்தை தொடர்ந்து அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியது ஒய்.எஸ்.ஆர் குடும்பம்தான். 2004ஆம் ஆண்டு ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்றார். அன்று முதல் ஒய்.எஸ்.ஆர் குடும்பம் சந்திரபாபு நாயுடுவிற்கு கடினமான நெருக்கடி கொடுத்து வந்தது. ராஜசேகர ரெட்டியின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி 2011ஆம் ஆண்டு ‘ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்’ என்ற கட்சியை தொடங்கினார். 

கட்சி ஆரம்பித்த மூன்று மாதத்தில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டு 5.43 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். அத்துடன் அவரது தாயார் விஜயலட்சுமி புலிவெண்டுலா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்த இரண்டு தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் குடும்பம் 6 மற்றும் 10 முறை வென்றிருந்தனர். 

எனினும் 2012 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது அவரது சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா மாநிலம் முழுவதும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக பாதயாத்திரை மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் புலிவெண்டுலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்திருந்தாலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 இடங்களில் 67ல் வெற்றிப் பெற்று பலம் வாய்ந்த எதிர்கட்சியாக உருவெடுத்தது.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 140க்கும் மேற்பட்ட இடங்களைப்  பெற்று பெரும்பான்மையான வெற்றியைப் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com