டிரெண்டிங்
சென்னை: தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு
சென்னை: தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட் கலந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு
தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட் கலந்து குடித்த வாலிபர் உயிரிழந்தார்.
சென்னை வால்டாக்ஸ் சாலை சர்காபுரத்தில் வசித்து வருபவர் கவுதம் (25). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று கவுதம் வீட்டில் மது அருந்தியுள்ளார். அப்போது தண்ணீர் தீர்ந்ததால் போதையில் அருகில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார்.
இதனால் மயக்கமடைந்த கவுதமை அருகிலிருந்த நபர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே கவுதம் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக யானைகவுனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.