தின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது

தின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது

தின்பண்டம் வாங்கிக் கொடுத்து 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது
Published on

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் இவர், கொரோனா ஊரடங்கால் அவருடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

இந்நிலையில் தனது கொல்லையில் கடலை பறிக்கும் பணி நடைபெற்று வருவதால் மணிகண்டன் அங்கு இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி அவரது கொல்லையில் விளையாடிக் கொண்டிருந்தபோது மணிகண்டன் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கடைக்குச் செல்வதாக கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த நான்கு வயது சிறுமி தானும் வருவதாக கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டன், சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. கடலை பறிக்கும் பணி நடைபெறுவதால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 


தகவலறிந்த அங்குவந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து மணிகண்டனை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com