மின்மோட்டாரை திருட முயற்சி : மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்

மின்மோட்டாரை திருட முயற்சி : மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்
மின்மோட்டாரை திருட முயற்சி : மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்

தஞ்சையில் மின்மோட்டாரை திருட முயற்சித்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சையை அடுத்த கீழபள்ளியேரியில் சுப்பிரமணி என்பவருக்கு நான்கரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மின்மோட்டாரை சுப்பிரமணி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வயலின் வரப்பு வழியே செல்லும் மின்வயரை அறுக்க முற்பட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கள்ளபெரம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, விரைந்து வந்து இளைஞரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் மின்மோட்டாரை திருடுவதற்காக மின்வயரை அறுத்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் உயிரிழந்த இளைஞர் தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் வயலின் வரப்பு வழியே மின்வயரை எடுத்துச்சென்றது தொடர்பாக சுப்பிரமணியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com