டிரெண்டிங்
இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும்: இல.கணேசன்
இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும்: இல.கணேசன்
இந்தி மொழியை நாடு முழுவதும் இணைப்பு மொழியாக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், நாடு முழுவதும் இந்தி, தேசிய மொழியாக அறியப்பட்டுள்ளது. நான் அதை இணைப்பு மொழியாக கருதுகிறேன். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்தியை நாடு முழுவதும் இணைப்பு மொழியாக்க வேண்டும். கேரளாவில் இந்தி மொழியை ஏற்றுக்கொண்டனர். அதனால், மலையாளம் பாதிக்கப்படவில்லை. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்தி உள்ளது. அதனால், அந்த மாநில மொழிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆந்திரா, தெலங்கானாவில் இந்தியை ஏற்றுக்கொண்டுவிட்டனர். தமிழ்நாட்டில் இந்தி வராமல், தமிழ் வளராது. ஆங்கிலம் மட்டுமே வளரும் எனத் தெரிவித்தார்.

