\
மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேன்: அமைச்சர் நிலோபர் கபில்

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேன்: அமைச்சர் நிலோபர் கபில்

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தேன்: அமைச்சர் நிலோபர் கபில்
Published on: 

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.  

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் சசிலா குடும்பத்தினர் அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார். அவரை தொடர்ந்து  அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அதே கருத்தை கூறியிருந்தார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ தான் ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும் உடன் சில அமைச்சர்கள் இருந்ததாகவும் கூறினார். 

இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதாவை, அமைச்சர்கள் எல்லோரும் குழுவாக சென்று பார்த்தோம். அவர் அவரச சிகிச்சை பிரிவில் இருந்து 2-வது வார்டுக்கு மாற்றும் போது நான் சந்தித்தேன் என்றும் கூறினார். மேலும் மற்ற அமைச்சர்களின் கருத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com