டிரெண்டிங்
பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது - எடியூரப்பா குற்றச்சாட்டு
பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது - எடியூரப்பா குற்றச்சாட்டு
பின் வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, “சித்தராமையா தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்துள்ளார். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம். மக்கள் எங்களுக்கு தான் முழு ஆதரவு அளித்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது.. காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகளை கண்டிக்கின்றோம். காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தோற்கடித்துள்ளனர். ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் வந்த பிறகே ஆளுநர் முடிவு எடுப்பார்” என்று கூறினார்.