கழுத்துவரை வந்த தாலி.. கடைசி நொடியில் திருமணத்தை நிறுத்திய பெண்! அதிர்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார்!

மணக்கோலத்தில் வந்த மாப்பிளையும், பெண்ணும் கோயில் பதிவேட்டில் கையெழுத்திட்டு, மணவறையில் அமர்ந்தனர். மாப்பிள்ளை தாலி கட்டும் அந்தத் தருணத்தில், மணப்பெண் திடீரென முகமும் மாறி மனதும் மாறி மங்கல நாணை அணிவிக்கவிடாமல் தடுத்தார்.
நின்ற கல்யாணம்
நின்ற கல்யாணம்WebTeam

இருவீட்டார் சம்மதத்துடன் முடிவான திருமணம்!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணினி பட்டதாரி படித்த இளைஞருக்கும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் கடந்த இரு மாதத்திற்கு முன்பு பேசி முடிவு செய்தனர்.

மணமக்கள் இருவருக்கும், திருமணம் நடக்க இருந்த நிலையில், இரு குடும்பத்தினர் தரப்பிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் திருவாடானை அருள்மிகு ஆதி ரெத்தினேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சினிமா பாணியில் கடைசி நொடியில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

நடக்க இருந்த விபரீதம் தெரியாமல் இருதரப்பினரும் திருமண ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், திருமணம் நடத்துவதற்கு அனைத்து சடங்குகளும் முடிந்தது. அந்த கடைசி நொடியில் தான் திருப்பம் ஏற்பட்டது. மணமகன் தாலி கட்டும் தருணத்தில் மணப்பெண் தாலியை பறித்து தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறியுள்ளார். அத்துடன் தாலியை கோயில் உண்டியலில் போட முயன்றதால் அங்கிருந்த இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருவீட்டைச் சேர்ந்தவர்களும் மணப்பெண்ணிடம் இருந்த தாலியை பிடிங்கி மணமகனிடம் கொடுத்து கட்டுமாறு வற்புறுத்தினர். அப்போது, வேறு வழியின்றி மணப்பெண் தொடர்ந்து திருமணத்திற்கு மறுக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நின்ற கல்யாணம்
கரையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை! பாதி உடல் மட்டுமே மீட்பு

விரைந்து வந்த காவல்துறை..

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார் திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன். இரு வீட்டாரிடமும் பேசி சமரச பேச்சுவார்த்தையை அவர் நடத்தினார். மணப்பெண் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் இந்த திருமணம் நின்று போனது.

இதனால் மணமகன் தரப்பில் இருந்து திருவாடனை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தான் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டதாகவும் தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றும் கூறி தாலியை கோவில் உண்டியலில் போட மணப்பெண் முயற்சித்ததாகவும், உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com