டிரெண்டிங்
லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு : மதுரையில் சோகம்
லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு : மதுரையில் சோகம்
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவலர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் கல்லணை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகாயினி (28). மதுரை பட்டாலியன் பிரிவில் பெண் காவலரால பணியாற்றி வந்த இவர், பணி முடிந்து இன்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார்த்திகாயினியின் இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் காவலர் கார்த்திகாயினி உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் காவலர் லாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.