‘விடுதலை கிடைச்சிருச்சு...’ விவாகரத்தை போட்டோஷூட்டுடன் கொண்டாடிய பெண் - வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

ஒரு பெண் தனக்கு விவாகரத்தானதை போட்டோஷூட் செய்து, கொண்டாடிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
divorce photoshoot
divorce photoshootinstagram

திருமணத்துக்கு முந்தைய போட்டோஷூட், திருமணத்துக்கு பிந்தைய போட்டோஷூட், கர்ப்பகால போட்டோஷூட், குழந்தை பிறப்புக்குப் பின்னான ஃபோட்டோஷூட், பிறந்தநாள் ஃபோட்டோஷூட் என வாழ்க்கையின் மிக முக்கியமான எல்லா தருணங்களையும் போட்டோஷூட் எடுப்பது உலகம் முழுக்கவே ட்ரெண்டாகி வருகிறது. இந்த வரிசையில், விவாகரத்தை ஃபோட்டோஷூட் செய்திருக்கிறார் பெண்ணொருவர்.

லாரன் ப்ரூக் என்ற அந்தப் பெண் தனக்கு விவாகரத்து கிடைத்த நிகழ்வை, போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போட்டோஷூட்டின் ஒரு புகைப்படத்தில் 'விவாகரத்து' என்று எழுதப்பட்ட பேனரை கையில் வைத்திருந்தபடி, சிவப்பு நிற உடையில் மகிழ்ச்சி பொங்க போஸ் கொடுக்கிறார் அந்த பெண். மற்றொரு புகைப்படத்தில் தனது திருமண உடைக்கு தீ வைப்பது போல் போஸ் கொடுத்தும் நின்றிருக்கிறார்.

இன்னொரு புகைப்படத்தில் ஒயின் பாட்டிலைத் திறப்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் திருமண புகைப்பட ஃப்ரேமை தனது குதிக்கால்களால் உடைத்து, பின்னர் படத்தை கிழித்தெறிவது போலவும் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

Lauren
LaurenInstagram

‘விவகாரத்து ஆனதை வெறித்தனமாக கொண்டாடும் இந்த பெண் யாருப்பா’ என நெட்டிசன்கள் பல்வேறு கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com