தேர்தல் பிரசாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா? - தேர்தல் ஆணையம் இன்று முடிவு

தேர்தல் பிரசாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா? - தேர்தல் ஆணையம் இன்று முடிவு
தேர்தல் பிரசாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா? -  தேர்தல் ஆணையம் இன்று முடிவு

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் என ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய நாட்டில் தற்போது பரவு வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் திரிபு பரவலை கருத்தில் கொண்டு பேரணி, பாதயாத்திரை மாதிரியான தேர்தல் பரப்புரைக்கு தடை விதித்திருந்தது இந்திய தேர்தல் ஆணையம்.

அதே நேரத்தில் டிஜிட்டல் முறையில் அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது ஆணையம். இந்த தடை காலம் இன்றுடன் (ஜனவரி 15) முடிவு பெறுகிறது. அதனால் தேர்தல் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது தொடர்பான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் இன்று எடுக்க உள்ளது. தற்போது வேட்பாளர் உட்பட ஐந்து பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற மூன்று மாநிலங்களில ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com