குஜராத் அணியை இன்றும் சுட்டெரிக்குமா சன்ரைசர்ஸ்? டாஸ் வென்று குஜராத் அணி பவுலிங் தேர்வு!

குஜராத் அணியை இன்றும் சுட்டெரிக்குமா சன்ரைசர்ஸ்? டாஸ் வென்று குஜராத் அணி பவுலிங் தேர்வு!
குஜராத் அணியை இன்றும் சுட்டெரிக்குமா சன்ரைசர்ஸ்? டாஸ் வென்று குஜராத் அணி பவுலிங் தேர்வு!

இன்றைய ஐபிஎல் போட்டியில் அசுர பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2022 சீசனில் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்று 2வது மிக வலுவான நிலையில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 295 ரன் அடித்துள்ளார். டேவிட் மில்லர், சுப்மான் கில், அபினவ் மனோகர், ராகுல் தெவாட்டியா வலுசேர்க்கின்றனர்.

ஒருவர் அவுட்டாகி வெளியேறினாலும், இன்னொருவர் வந்து அட்டகாசமாக விளையாடுவதால் அந்த அணியின் பேட்டிங்கை எதிர்கொள்வது எதிரணிக்கு இடியாப்பச் சிக்கலாகவே இருக்கிறது. பந்து வீச்சில் முகமது ஷமி, பெர்குசன், ரஷீத் கான், யாஷ் தயாள் அற்புதமான பார்மில் உள்ளனர். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த அணி தோல்வி அடைந்த ஒரே ஒரு போட்டி ஐதராபாத்திற்கு எதிராக தான். கடந்த 11ம் தேதி நடந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றிருந்தது. அதற்கு பதிலடி தரும் முனைப்பில் முழு உத்வேகத்துடன் குஜராத் இன்று களம் இறங்கும்.

மறுபக்கம் ஐதராபாத் அணி 7 போட்டியில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல் 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணி சென்னை, மும்பை அணிகளோடு இணைத்து கேலிப் பேச்சுகளுக்கு உள்ளானது. ஆனால் அடுத்த 5 போட்டியிலும் வென்று மிரட்டியது. ரன்ரேட்டிலும் மிக வலுவான திகழ்கிறது அந்த அணி. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக 220 ரன் எடுத்துள்ளார். ராகுல் திரிபாதி, மார்க்ராம் பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சில் நடராஜன் 15 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். இன்று 4 விக்கெட் எடுத்தால் முதல் இடத்திற்கு முன்னேறலாம். மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமாரும் மிரட்டுகின்றனர். பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க போராடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், நடராஜன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com