கமல்ஹாசன் புது கட்சி தொடங்கினால் ஆதரவா?: திருமாவளவன் விளக்கம்

கமல்ஹாசன் புது கட்சி தொடங்கினால் ஆதரவா?: திருமாவளவன் விளக்கம்

கமல்ஹாசன் புது கட்சி தொடங்கினால் ஆதரவா?: திருமாவளவன் விளக்கம்
Published on

கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் அவரது கொள்கைகளைப் பொறுத்தே ஆதரவளிப்பது குறித்து கருத்து கூறமுடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அரசியலுக்கு வரவேண்டும் என்றால் இத்தனை போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. எந்த வயதில் மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் வருகிறதோ அப்போது வரலாம். கமல்ஹாசனும் அரசியலுக்கு வரலாம். எந்த கட்சிக்கும் ஆதரவு தரலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. புது கட்சி கூட தொடங்கலாம். அவரது கொள்கை, கோட்டுபாடுகளை பொறுத்தே ஆதரவளிப்பதா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.

நீட் விவகாரத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் போராடுவது நல்லதுதான். இருப்பினும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்த வேண்டும். இதுவே என் விருப்பம். அதற்காக தோழமை கட்சிகளுடன் பேசி வருகிறேன்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் பகவத் கீதை வைக்கப்பட்டிருப்பது அவரை மட்டுமில்லாது எல்லா முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதாகவே உணர்கிறேன். இதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே அதனை அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com