\
கணவர் உயிரிழந்த சோகம் : ஆற்றில் குதித்த மனைவி

கணவர் உயிரிழந்த சோகம் : ஆற்றில் குதித்த மனைவி

கணவர் உயிரிழந்த சோகம் : ஆற்றில் குதித்த மனைவி
Published on: 

கணவன் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மனைவியை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சை மேலஅலங்கத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நீலாவதி (46). கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மிகவும் அன்பாக இருந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வீரமணி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நீலாவதி மனவேதனையில் இருந்துள்ளார்.

வீட்டில் யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த நீலாவதி இன்று காலை தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள கல்லணை கால்வாய்க்கு சென்று அங்கு திடீரென ஆற்றில் குதித்தார். தண்ணீரின் வேகம் அதிகரிப்பால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் குதித்து நீலாவதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com