அமரிந்தர் சிங்-க்கு ஆதரவாக மனைவி பிரணீத் கவுர் தீவிர பரப்புரை

அமரிந்தர் சிங்-க்கு ஆதரவாக மனைவி பிரணீத் கவுர் தீவிர பரப்புரை

அமரிந்தர் சிங்-க்கு ஆதரவாக மனைவி பிரணீத் கவுர் தீவிர பரப்புரை
Published on

காங்கிரஸிலிருந்து விலகிய அமரிந்தர் சிங்குக்கு, அவரது மனைவியும், காங்கிரஸ் எம்.பி.யுமான பிரணீத் கவுர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

பஞ்சாபில் வருகிற 20 ஆம் தேதி சட்டப்பேரவைத தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். அவர், பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், தேர்தலில் பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமரிந்தர் சிங்குக்கு ஆதரவாக அவரது மனைவியும், காங்கிரஸ் எம்.பி.யுமான பிரணீத் கவுர் பிரசாரம் செய்து வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், குடும்பம்தான் எல்லாவற்றும் மேலானது என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com