வாஸ்கோடகாமா ஏன் திருமணம் செய்யவில்லை? - மனைவியின் கேள்விக்கு கணவனின் Thug பதில்!

வாஸ்கோடகாமா ஏன் திருமணம் செய்யவில்லை? - மனைவியின் கேள்விக்கு கணவனின் Thug பதில்!
வாஸ்கோடகாமா ஏன் திருமணம் செய்யவில்லை? - மனைவியின் கேள்விக்கு கணவனின் Thug பதில்!

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ரீல்ஸ் போடுவதும் யூடியூபில் ஷார்ட்ஸ் போடுவதும் இணையவாசிகளின் வழக்கமாகவே ஆகிவிட்டது. அவற்றில் பல வீடியோக்கள் நாள்தோறும் லட்சக்காணவர்களால் பார்க்கப்பட்டு வைரலாக்கப்படுவதும் உண்டு.

அந்த வகையில் மனைவி தன்னுடைய கணவனிடம் வாஸ்கோடகாமா ஏன் திருமணமே செய்துக்கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு கணவன் கொடுத்த பதில்தான் நெட்டிசன்களிடையே வைரலாகியிருக்கிறது.

அந்த வீடியோவில், “ஏன் வாஸ்கோடகாமா திருமணம் செய்துக்கொள்ளவில்லை?” என மனைவி கேட்டதற்கு, “இந்தியாவுக்கு வந்து வர்த்தக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக வாஸ்கோடகாமா திருமணம் செய்துக்கொள்ளவில்லை” என்று கணவன் கூற, குழம்பிப்போன அந்த மனைவி, “திருமணத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு?” என மீண்டும் கேள்வி கேட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Mani Sha (@manisha12201220)

அதற்கு, “ஒருவேளை வாஸ்கோடகாமா திருமணம் செய்துக் கொண்டு தனது பயணத்துக்கு போயிருந்தார், அவரிடம் எங்கே இருக்கிறாய், என்ன செய்கிறாய்? ஏன் இந்த ஆய்வை இங்கிருந்தே செய்ய முடியாதா? என்றேல்லாம் கேட்டிருப்பார். மேலும், தொடர்ந்து வியாபாரத்துக்காக பயணித்துவிட்டு வரும் போது காய்கறி உள்ளிட்ட பல பொருட்களையும் வாங்கி வரச் சொல்லியிருப்பார்.” என நக்கலாக பதிலளித்திருக்கிறார்.

இந்த ரீல்ஸ் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் அவரது கான்செப்ட்டிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பெரும்பாலான கணவன் மனைவி உறவில் இப்படிதான் நடக்கிறது என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 29ல் பகிரப்பட்ட இந்த ரீல்ஸை இதுவரை 47 லட்சம் பேர் வரை பார்த்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com