பைக் டாக்ஸி ஓட்டும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. நெட்டிசன்களை நெகிழவைத்த அசத்தல் காரணம்!

பைக் டாக்ஸி ஓட்டும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. நெட்டிசன்களை நெகிழவைத்த அசத்தல் காரணம்!
பைக் டாக்ஸி ஓட்டும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. நெட்டிசன்களை நெகிழவைத்த அசத்தல் காரணம்!

ஐ.டி. கம்பெனிகளில் பணியாற்றுவோர், வேலை நேரம் போக, தங்களது பொழுதை கழிப்பதற்காக குடும்பத்தினருடனோ, நண்பர்கள் குழுவுடனோ அடிக்கடி டிராவல் செல்வது, பார்ட்டிக்கு போவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறாராராம். ஆம், சரியாகத்தான் படிக்கிறீர்கள். சாஃப்ட்வேர் டெவலெப்பராக இருக்கும் பொறியாளர் ஒருவர் தன்னுடைய பணி நேரம் போக, ரேப்பிடோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த வேலை செய்வதற்காக அவர் கூறியிருக்கும் காரணம்தான் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த ட்விட்டர் பயனரான நிகில் சேத் என்பவர் ரேப்பிடோ பைக் டாக்சியில் தான் சேர வேண்டிய இடத்திற்கு சென்றிருக்கிறார். அந்த ரேப்பிடோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார் நிகில் சேத். அப்போது அவருடைய முழு நேர வேலையே பைக் டாக்ஸி ஓட்டுவதுதானா என கேட்க, அதற்கு அந்த ஓட்டுநர் தன்னை சாஃப்ட்வேர் இன்ஜினியர் என்றும், புது புது மக்களை சந்திப்பதற்காகவே இந்த வேலையை செய்து வருவதாகவும் கூறி நிகிலை ஆச்சர்ய்யப்பட வைத்திருக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் நிகில் பதிவிட்டிருக்கிறார். அதில், “இன்றைக்கு என்னுடைய ரேப்பிடோ டிரைவர் இருந்தவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருப்பவர். இதில் அதிசயிக்கக் வைக்கும் விஷயம் என்னவென்றால், வார இறுதியில் புதுப்புது மனிதர்களை சந்தித்து பேசுவதை ஹாபியாக வைத்திருப்பதாலேயே பைக் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு நெட்டிசன்களிடையே வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மேலும் அந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரின் செயலை பாராட்டி, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நேரம் செலவழிக்கவே நேரமில்லாமல் இருக்கும் வேளையில், புதிய மனிதர்களை சந்திப்பதற்காகவே நேரம் ஒதுக்குவது ஆச்சர்யப்பட வைப்பதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com