ஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்?: புது தகவல்

ஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்?: புது தகவல்
ஓபிஎஸ்-ஐ மத்திய அமைச்சர் சந்திக்காதது ஏன்?: புது தகவல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காதது ஏன் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க விரும்புவதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் ஒரு வாரம் முன்னதாகவே நேரம் கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தன்னுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க வருவதாகவும், முற்றிலும் தனிப்பட்ட சந்திப்பாக அது இருக்கும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சந்திப்புக்கான குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் கூறப்படாத நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து அமைச்சருக்கு வந்த தொலைபேசி அழைப்பில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது சகோதரரை மதுரை மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்ல ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை அளித்ததற்கு நேரில் நன்றி தெரிவிக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தனிப்பட்ட சந்திப்பு என தெரிவித்த நிலையில், சந்திப்புக்கு வழங்கப்பட்ட நேரத்துக்கு ஓரிரு மணி நேரம் முன்பாக, அதுபற்றி தமிழக முதல்வர் பேட்டி அளித்ததாகவும், அதனால், பொது சந்திப்பாக அறியப்படும் என்பதால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாரையும் சந்திக்கவில்லை என்றும் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com