\
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல ஏன் தடைவிதிக்க வேண்டும் :சிபிஐ விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

Published on: 

மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடைவிதிப்பது ஏன் என்பது குறித்து சிபிஐ விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜாராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதனால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை ஏற்பட்டது. ஆனால் அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் லண்டன் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க சி.பி.ஐ தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. 

இதையேற்று கொண்ட நீதிமன்றம், வரும் 20ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக, தெரிவித்தது. இதற்கிடையே இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கார்த்தி சிதம்பரம் விரைவில் சிறை செல்வது உறுதி என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com