\
பணமதிப்பிழப்பை ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்?: சீமான் கேள்வி

பணமதிப்பிழப்பை ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்?: சீமான் கேள்வி

பணமதிப்பிழப்பை ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்?: சீமான் கேள்வி
Published on: 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முதலில் வரவேற்ற ஸ்டாலின் தற்போது அதை எதிர்ப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், ரேஷன் சர்க்கரை விலை உயர்வு பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெறவே வழிவகுக்கும் என்றும் இதேநிலை தொடர்ந்தால் ரேஷன் கடைகளே இல்லாத நிலை ஏற்படும் என்றும் கூறினார். மேலும், எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தது வரவேற்கத்தக்கது என்றும் சீமான் தெரிவித்தார். விசிக மீதான பாஜகவின் தாக்குதல் பண்பற்ற அரசியலை காட்டுகிறது, இது போன்ற செயல்கள் நாகரிகமற்றது என அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com