எஸ்வி சேகரை, எடப்பாடி பழனிசாமி ஏன் கைது செய்யவில்லை? - டிடிவி தினகரன் விளக்கம்!

எஸ்வி சேகரை, எடப்பாடி பழனிசாமி ஏன் கைது செய்யவில்லை? - டிடிவி தினகரன் விளக்கம்!

எஸ்வி சேகரை, எடப்பாடி பழனிசாமி ஏன் கைது செய்யவில்லை? - டிடிவி தினகரன் விளக்கம்!
Published on

பெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய எஸ்வி சேகரை முதலமைச்சர் பழனிசாமி நிச்சயம் கைது செய்யமாட்டார் என அமமுக
துணைச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரை, மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அமைச்சர் செல்லூர் ராஜூ நகரத்தார்கள் பற்றி பேசியது தவறு. நகரத்தார்கள்
தமிழகர்களின் சிறப்பான கலாச்சாரத்தை வெளிக்கொண்டு வந்தவர்கள். அவர்களை தவறாக பேசியதற்கு செல்லூர் ராஜூ மன்னிப்பு
கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், பதவியை இழக்க நேரிடும். பெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய
எஸ்வி சேகரை எடப்பாடி பழனிசாமி கைது செய்ய மாட்டார்.

பாஜகவினரை எப்படி அவர் கைது செய்வார்..? அதை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே நிச்சயம் கைது செய்யமாட்டார். கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியினரின் தவறை தட்டிகேட்டவர்களை, இரவு நேரங்களில் போலீஸார் வீடு புகுந்து கைது செய்தனர். தவறு செய்யும் அரசு அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம். ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்போம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் கொண்டு வரக்கூடாது’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com