பஸ் கூரை மீது ஏன் வெள்ளை பெயின்ட் அடிக்கப்படுகிறது தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

பஸ் கூரை மீது ஏன் வெள்ளை பெயின்ட் அடிக்கப்படுகிறது தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
பஸ் கூரை மீது ஏன் வெள்ளை பெயின்ட் அடிக்கப்படுகிறது தெரியுமா? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

கலர் சைக்காலஜி பற்றி பலரும் கேள்வியுற்றிருப்போம். வெயில் காலங்களில் கருப்பு நிற உடை அணிந்து வெளியே சென்றால் உடலில் உள்ள ஆற்றல் குறையும் போன்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் பேருந்துகளின் கூரை மீது ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து எப்போதாவது தோன்றியதுண்டா?

அதன்படி, ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர், “ஏன் லண்டனில் உள்ள பேருந்துகளின் கூரையில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கின்றன?” என கேள்வி எழுப்பி பதிவிட்டிருக்கிறார்.

இதற்கான உரிய பதில் தெரிந்திருக்காத நிலையில் பலரும் தங்களுக்கு தெரிந்த கதைகளை பதிவிட்டிருக்கிறார்கள். அதில், “வெள்ளை நிற பெயிண்ட்டின் விலை குறைவாக இருந்திருக்கும்” , “பேருந்தின் மற்ற பகுதியில் அடிக்கப்பட்ட பெயின்ட்டுக்கு பொருத்தமாக வெள்ளை நிறம் இருந்திருக்கும்” போன்ற கருத்துகள் பதிவிடப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மையிலேயே பேருந்துகளின் கூரை மீது வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதற்கு பின்னணியின் அறிவியல் ரீதியான காரணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது பேருந்தின் கூரை மீது என்ன இருக்கும், என்ன பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாமலேயே இருக்கும். ஆனால் மேலிருந்து பார்த்தால் அதில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கும்.

இது ஏதோ ஸ்டைலுக்காகவோ, பேருந்தின் மற்ற பகுதியில் உள்ள பெயின்ட் நிறத்தை மேட்ச் செய்வதற்காகவோ இல்லை. பேருந்தின் உள்ளே இருப்பவர்களுக்கு சூரிய ஒளியின் தாக்கம் ஏற்படக் கூடாது என்பதால் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்படுவது வாடிக்கையாகியிருக்கிறது.

ஏனெனில், வெள்ளை நிறம் சூட்டை தடுத்து குளிர்ச்சியை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அதேவேளையில் டார்க் கலர்கள் ஒளியை உறிஞ்சி வெப்பத்தை கொடுக்கவல்லதால் கூரை மீது அவர் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால்தான் பேருந்துகளின் மேற்கூரையின் மீது வெள்ளை நிறத்தால் பெயின்ட் அடிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com