அப்போலோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார்?: ஆணையத்தில் தகவல்

அப்போலோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார்?: ஆணையத்தில் தகவல்

அப்போலோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார்?: ஆணையத்தில் தகவல்
Published on

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பலரும் தங்களது தெரிந்து தகவல்களை விசாரணை ஆணையத்தில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை விசாரணை ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கமளித்தவர்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்தவர்கள் யார் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் நேரில் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் தீபக் மட்டும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட முதல் வாரத்திலும் பின்னர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4ஆம் தேதியும் பார்த்ததாக ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை தலைவர் ப்ரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு டிசம்பர் 22ஆம் தேதி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதில் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யார் யார் என்ற விபரங்களை அசல் ஆவணங்களாக ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. ஆனால் அப்போலோ சார்பில் விசாரணை ஆணையத்தில் இருமுறை ஆஜரான அப்போலோ தரப்பு வழக்கிறஞர் மஹிபுனா பாஷா ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டார். அந்த அவகாசம் வரும் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் தற்போதுவரை எவ்வித ஆவணங்களையும் அப்போலோ தரப்பு ஆணையத்தில் சமர்ப்பிக்காத நிலையில வரும் 12ஆம் தேதியும் ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் விசாரணை ஆணையம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com