பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? - சோனியா காந்தி ஆலோசனை
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆலோசனையை தொடங்கியுள்ளார்.
கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலியான 'ஷக்தி' மூலம் அவர் கேட்டறிகிறார். இது தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் அல்லாத பொதுமக்களின் கருத்தும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற மெய்நிகர் பேரணியில் பேசிய ராகுல் காந்தி பஞ்சாப் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் மாநில முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர் பந்தயத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் முதல்வர் சன்னிக்கு, பட்டியலினத்தவர் என்பதால் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.